search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுடுநீர் குளியல்"

    மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    குளிர்காலம் நெருங்க தொடங்கிவிட்டாலே உடல்நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். பெரும்பாலானவர்களை சோர்வும், அசதியும் வந்து அரவணைத்துக்கொள்ளும். ஏற்கனவே மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மனச்சோர்வால் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.

    மன அழுத்தத்திற்கும், குளிர்கால சுடுநீர் குளியலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சூடான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

    ஜெர்மனியிலுள்ள பிரிய்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வாரம் இரண்டு முறை சுடுநீரில் குளித்து வந்தால் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் குறைய தொடங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி 30 நிமிடங்கள் குளிப்பது மன அழுத்தத்தை போக்குவதற்காக மேற்கொள்ளும் பயிற்சியை விட நல்ல பலனை கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    பொதுவாகவே பகல் நேரத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இரவில் குறைந்துபோய் காணப்படும். குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடான நீரில் குளியல் போடுவது உடல் நலத்திற்கும் நல்லது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடல் சோர்வு உண்டாகும். அதனை சரிப்படுத்துவதற்கு சுடுநீர் குளியல் கைகொடுக்கும். அத்துடன் மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ×